திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், பாரதிபுரம் பகுதியில் 6
நாட்களுக்குப் பின்னர் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று(6) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பைசல் நகர், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான
மஹ்மூது முகம்மது அலியார் (55 வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பகுதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, ஒரு பகுதியில் இருந்த, குடிசை ஒன்றில் இருந்து இந்த
சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குடிசைக்கு அண்மித்த பகுதியிலே இவர் வாழும் சிறிய
குடிசை போன்ற வீடும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.