Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில்
இன்று(02) அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின்
முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணி

சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர்
த.கயசீலன் சென்று பார்வையிட்டு படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்
பணியை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version