Home இலங்கை சமூகம் மஸ்கெலியாவில் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

மஸ்கெலியாவில் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

0

மஸ்கெலியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர், மவுசாகலை நீர்
தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர், நேற்று(08.08.2025) மாலை 05.30 மணியளவில் மவுசாகலை நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் சுழியோடிகளின் உதவியோடு மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

EPF பணம்

சடலமாக மீட்கப்பட்ட நபர் மஸ்கெலிய புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த 55
வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

குறித்த குடும்பஸ்தர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவரின்
உறவினர்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு
செய்திருந்தனர்.

அவர் தனது EPF பணத்தை பெற தொடர்ந்து முயற்சித்தும் பெற்றுக்கொள்ள முடியாது மன
உளைச்சலில் இருந்துள்ளார்.

அவரது ஆடை மற்றும் பாதணி கிடந்த இடத்தில் மண் தரையில் EPF என எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version