Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் யானை தாக்கியதில் குடும்ப பெண் மரணம்

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் குடும்ப பெண் மரணம்

0

Courtesy: Satheesh

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(01.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம்
சந்திரா என்பவரே இந்த சம்பவத்தில் பலியானவராவார்.

விசாரணை

தனது வீட்டு வளவினுள் புகுந்த யானைகளைக் கண்டு குறித்த பெண் உயிர்
தப்புவதற்காக ஓடிய போது, காட்டு யானை மறித்து தாக்கியதில் இவர்
உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version