Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலி!

மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலி!

0

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த காவல்துறை பிரிவின் தாமரைக்கேணி,
சவுக்கடி வீதி நாற்சந்தியில் நேற்று (06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம்
கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான ரீ. சாமிளா என்ற இரு பிள்ளைகளின் தாயே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருவர் படுகாயம் 

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மாலை 04.00 மணியளவில் தனது வசிப்பிடமான நேயம்
கிராமத்தை நோக்கி, அவரது சகோதரி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வர, அவரும்
அவரது 10 வயது மகனும் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து பயணித்துக்
கொண்டிருந்துள்ளனர்.

அவ்வேளை, தாமரைக்கேணி நாற்சந்தியை அண்மித்த போது சவுக்கடி கடற்கரை
பக்கத்திலிருந்து வந்த பிக்கப் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் குறித்த பெண் உயிரிழந்ததுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது சகோதரியும் அவரது 10 வயது மகனும்
படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விபத்தில் பலியான பெண்ணின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பிக்கப் வாகனத்தைக் கைப்பற்றிய ஏறாவூர் காவல்துறையினர் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version