கண்டியிலிருந்து கொழும்புக்கு வருகைத் தரும் தொடருந்து பயணிகளுக்காக நாளை (08.12.2025) காலை முதல் விசேட பேருந்துகள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இந்த விசேட பேருந்துகளில் பயணிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
அதன்படி, நாளை (08.12.2025) அதிகாலை 4 மணி , 4.15 மற்றும் 4.30 க்கு தொடருந்து பருவச் சீட்டு உள்ள பயணிகளுக்கு மாத்திரம் போக்குவரத்து சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்து சேவை
இந்தப் பேருந்துகள் போதுமானதாக இல்லாவிட்டால், போக்குவரத்துக்கு மேலதிகமாக பேருந்துகள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கண்டி இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை (08.12.2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, கொழும்பு மற்றும் கண்டி இடையிலான போக்குவரத்துக்காக கண்டி, கட்டுகஸ்தோட்டை, கலகெதர, ஹதரலியத்த, ரம்புக்கன, கரடுபன, கேகாலை, பஸ்யால வழியாக கொழும்பு வரையிலான பாதைகள் போக்குவரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
