Home இலங்கை சமூகம் கொழும்பு புறநகர் பகுதியில் ஆடையகத்தில் இரகசிய கமரா: உரிமையாளரிடம் சிக்கிய காணொளிகள்

கொழும்பு புறநகர் பகுதியில் ஆடையகத்தில் இரகசிய கமரா: உரிமையாளரிடம் சிக்கிய காணொளிகள்

0

கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் உள்ள ஒரு ஆடையகத்தின் உரிமையாளரை பொலிஸார்
கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலங்கம பொலிஸாரின் கூற்றுப்படி, நேற்று கடையின் ஆடை
மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை அதிகாரிகள்
கண்டுபிடித்ததையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வாளர்கள் விசாரணை

இதனையடுத்து சந்தேகநபருக்குச் சொந்தமான ஒரு கையடக்கத்தொலைபேசியை
பரிசோதிக்கப்பட்டபோது, அறைக்குள் பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில்,பெண்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள்; ஆடை மாற்றும் காணொளிகள்
மற்றும் ஒரு வீட்டின் குளியலறையில் ஒரு பெண் குளிக்கும் தனி காணொளி ஆகியவை
இந்த காட்சிகளில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளிகள் இணையங்களில் பதிவேற்றப்பட்டதா அல்லது உள்ளூர் அல்லது
வெளிநாட்டு வலைத்தளங்களுக்கு விற்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version