Home இலங்கை குற்றம் இலங்கையில் பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் கைது

இலங்கையில் பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் கைது

0

பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீகொடையின் அரலிய உயன பகுதியில் இன்று 9 மில்லி மீற்றர் துப்பாக்கியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கியை அவருக்கு வழங்கியதாக கூறப்படும் மன்னார் பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியும், சந்தேகத்திற்குரிய ரெப் பாடகரின் மேலாளர் எனக் கூறப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி 

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை கொட்டவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய போது இந்தத் துப்பாக்கி திருடப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு கான்ஸ்டபிள் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இந்த துப்பாக்கி பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version