Home இலங்கை சமூகம் கடும் வெப்பத்தினால் மயங்கி விழுந்த குடும்பஸ்தர்: உயிரிழந்த கொடூரம்

கடும் வெப்பத்தினால் மயங்கி விழுந்த குடும்பஸ்தர்: உயிரிழந்த கொடூரம்

0

மூதூர் காவல்பிரிவிற்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று(20) மதியம் இடம்பெற்றுள்ளது.

மூதூர் பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை

வயல் வேலை

பெரியவெளி குளத்து வயலில்  வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மதியமளவில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரை மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

நாசாவுடன் இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…!

சடலம் 

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் மற்றும் வெயிலில் நின்று வயல் வேலை செய்கின்றவர்கள் வெயில் உச்சமான நேரங்களில் வயல் வேலை செய்வதை தவிர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version