Home இலங்கை சமூகம் திருகோணமலையில் விரட்டியடிக்கப்பட்ட விவசாயிகள்

திருகோணமலையில் விரட்டியடிக்கப்பட்ட விவசாயிகள்

0

திருகோணமலை முத்து நகர் விவசாய பகுதியில் நேற்றையதினம்(27) சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார் கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு விவசாயிகள் மற்றும் குறித்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவ இடத்துக்கு இலங்கை துறை முக அதிகார சபையினர் உள்ளிட்டவர்களுடன் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள குழுவினரும் உள் நுழைந்துள்ளனர்.

 மோதல் நிலை

இதனை தடுக்க சென்ற விவசாயிகளை தனியார் நிறுவன ஊழியர்கள் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த முத்து நகர் பகுதியில் ஏற்கனவே மக்களின் விவசாய காணிகளை அபகரித்து தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து மேலும் அங்கு உள்ள விவசாய காணியில் மேலும் திட்டத்தை ஆரம்பிக்க சென்ற நிலையில் இந்த கை கலப்பு இடம் பெற்றது.

குறித்த முத்து நகர் பகுதி விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாய காணியை மீட்டுத்தரக்கோரிய பல போராட்டங்களை அண்மையில் முன்னெடுத்தனர்.

இவ்வாறான நிலையில் வேலை திட்டத்தை ஆரம்பிக்கபடாத காணிகளில் விவசாய செய்கை மேற்கொள்ள முடியுமான நிலைக்கு ஒத்துழைப்பதாக திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் கூறியிருந்த போதிலும் தற்போது அது சாத்தியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version