திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர்
விவசாய காணி சூரிய மின் சக்திக்காக அபகரிக்கப்பட்ட நிலையில் அதனை
விடுவிக்குமாறு அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த காணியை இலங்கை துறை
முக அதிகார சபை இதனை கையகப்படுத்தி இரு தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்
சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளனர்.
இந்த விவசாய காணியை நம்பியே மக்கள் விவசாயம் செய்து வந்தனர். சுமார் 53 வருடங்களாக இங்கு நெற் பயிர் செய்கை
விவசாயம் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
தற்போது சூரிய மின் சக்தி உற்பத்திக்காக சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட
பகுதிகளை வேலி அடைத்து தங்களுடைய திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் 800
ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான
நிலையில் கடந்த 29.07.2025 ஆம் திகதி அன்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்தின் போது மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளை
பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தங்களுக்கு நீதியான நியாயமான முறையில் அபகரிக்கப்பட்ட விவசாய காணியை
விடுவித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
