Home இலங்கை சமூகம் வயல்களில் நீர் தேங்கி நிற்பதால் கையினால் அறுவடையினை மேற்கொள்ளும் விவசாயிகள்!

வயல்களில் நீர் தேங்கி நிற்பதால் கையினால் அறுவடையினை மேற்கொள்ளும் விவசாயிகள்!

0

கிளிநொச்சி மாவட்டத்தின், குறிப்பாக கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட
விளைந்த நெல் வயல்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த நெல் வயல் நிலங்களில் தங்களின் உணவுத் தேவைக்காவது அரிசியை
பெற்றுக்கொள்ளும் முயற்சியில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கையினால் நெல்
அறுவடை செய்யவதனை இன்றைய தினம் (29) அவதானிக்க முடிந்தது.

இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு காலபோக நெல் வயல்கள்
வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியில்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நிலைமை

அறுவடையினை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியான
வெள்ள நிலைமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும்
நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், தமது தோள்களிலே சுமந்து
சென்று அறுவடை செய்த நெல்லினை வீதிகளில் நெல்லினை உலர வைத்த பின்னரே நெல்லினை
பயன்படுத்த முடியும் எனவும் தேறிய முழுமையான நெல்லாக இல்லை எனவும்
கவலை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை
கமநல காப்புறுதிச் சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கமநலசேவை நிலைய
உத்தியோகத்தர்கள் சென்று இன்று பார்வையிட்டனர்.

இதன்போது, கண்டாவளை, முரசுமோட்டை, பன்னங்கண்டி, உருத்திரபுரம் பெரியகுளம் உள்ளிட்ட
பகுதிகளில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அழிவடைந்த பகுதிகளை பார்வையிட்டு
வருகின்றனர்.

காணொளி – தவேந்திரன் 

NO COMMENTS

Exit mobile version