Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காணப்படும் நெற்களஞ்சியசாலை : விவசாயிகள் கவலை

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காணப்படும் நெற்களஞ்சியசாலை : விவசாயிகள் கவலை

0

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர்
பிரிவில் மணற்பிட்டியில் கோடிக்கான மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு
கைவிடப்பட்டுள்ள நிலையில் காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலையில் மீண்டும்
நெல் கொள்வனவினை ஆரம்பிக்குமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும்
அதிகாரசபையினால் குறித்த நெல் களஞ்சியசாலை சகல வசதிகளுடனும் பல கோடி ரூபா
செலவில் அமைக்கப்பட்டது.

திறப்பதற்கான நடவடிக்கை

குறித்த களஞ்சியசாலையின் ஊடாக கடந்த காலத்தில் நெல் சந்தைப்படுத்தும்
அதிகாரசபையினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வந்தபோதிலும் சில காலமாக நெல்
கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த களஞ்சியசாலையானது காடுகள் நிறைந்ததாக
காணப்படுவதுடன் அங்குள்ள கட்டிடங்களும் உடைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்பட்டு இதுவரையில்
அரிசியாக்கப்படாமல் சுமார் 25க்கும் அதிகமான நெல்மூடைகள் இங்கு தங்கும் விடுதியில் உள்ள அறைகளில் கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளது.

இந்நிலையில், இன்று நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படும் நிலையில் இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த  நெல்மூடைகள்
அரிசியாக்கப்படாமல் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் இதன்போது கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், க்ளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்
அரசாங்கம் இந்த நெல் களஞ்சியசாலையினையும் கருத்தில் கொண்டு இதனை திறப்பதற்கான
நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version