அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக தவறான முறைக்குட்படுத்தி வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை
மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை
ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில்
பாதிக்கப்பட்டவராவார்.
குடும்பத்தில் 3ஆவது பிள்ளையாக இருக்கும் 14 வயது
மதிக்கத்தக்க இந்த மாணவியை அவரது தந்தை இவ்வாறு தவறான முறைக்குட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
பெரிய நீலாவணை
பொலிஸாருக்கு நேற்றையதினம் (15.11.2025) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால்
வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன்
பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக
அனுமதித்துள்ளனர்.
மேலும்
கைதான சந்தேகநபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள்
பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
