Home இலங்கை சமூகம் மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்க முயன்ற தந்தை பரிதாபமாக பலி

மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்க முயன்ற தந்தை பரிதாபமாக பலி

0

காலி (Galle) – எல்பிட்டிய (Elpitiya), தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை (20) இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இன்று மது போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் மண்வெட்டி ஒன்றினால் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தாக்க முயன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

இதன்போது, மனைவியும் பிள்ளைகளும் உயிர் தப்புவதற்காக அயல் வீட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளனர். இதன்போது, மது போதையில் தந்தை வீட்டில் இருந்த வேளை, திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்ட போது வீட்டின் அறையொன்றில் எரிந்த நிலையில் தந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/father-died-in-the-fire-elpitiya-1718885997

NO COMMENTS

Exit mobile version