களுத்துறையில் தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த நிஸ்ஸங்க கிங்ஸ்லி லால் டி சில்வா என்ற 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த அவர் பாணந்துறை அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
எனினும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் ஜனக விதானகேவின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
