களுத்துறை – கோரகாதுவ பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கனமழை
நேற்று முன்தினம் (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் நேற்று (17) பிற்பகல் கோரகாதுவ பிரதேசத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் மழை வீழ்ச்சி தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.