கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
போதைப்பொருள் பாவனை
மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த அப்துல் அஸீஸ் மொஹமட் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக போதைப்பொருள் பாவனை காரணமாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகநபர், உரிய புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மரக்கறி விற்பனை
சந்தேகநபரின் மகன் மாளிகாவத்தை, ஜும்மா வீதி பகுதியில் மரக்கறி விற்பனை செய்யும் வியாபாரி என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான தந்தை கடந்த 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் மரக்கறி வியாபார நிலையத்திற்குச் சென்ற போது, மகனை கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தில் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த மகன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாது என பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.