Home இலங்கை குற்றம் தனியாக செயற்படவுள்ள நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு

தனியாக செயற்படவுள்ள நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு

0

குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் முன்னர் செயற்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தனி பொலிஸ் பிரிவாக மீண்டும் செயற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுப்பிக்கப்பட்ட பிரிவு, பிரதி பொலிஸ் அதிபர் (DIG) மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்(SSP)ஆகியோரின் தலைமையில் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பிரிவு

ஏற்கனவே இந்த பொலிஸ் பிரிவு, நல்லாட்சி காலத்தில் தீவிரமான செயற்பாட்டை கொண்டிருந்தது.

இந்த பிரிவு, மஹிந்த ராஜபக்சவின் கட்சியில் இருந்து பலரை விசாரணைகளுக்கு உட்படுத்தி, அவர்களுக்கு எதிராக வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version