Home இலங்கை சமூகம் டின் மீன் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

டின் மீன் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

0

Courtesy: Sivaa Mayuri

கடற்றொழில் அமைச்சினால் தற்காலிகமாக இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையின் டின் மீன் உற்பத்தியாளர்கள், நாட்டிற்குள் தமது தொழில்துறையின் உடனடி வீழ்ச்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்

இந்த வருடம் ஜனவரி 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், டின்மீன் இறக்குமதிக்கான அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பணிப்புரை விடுத்திருந்தார்.

இலங்கை சுங்கத் தகவல்கள்

எவ்வாறாயினும், இந்தப் பணிப்புரையையும் மீறி, வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 4.5 மில்லியன் டின் மீன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை டின் மீன் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு ஏப்ரலில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான டின் மீன் டின்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே மலிவு மற்றும் பெருமளவு கட்டுப்பாடற்ற டின் மீன் இறக்குமதியுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களால் போட்டியிட முடியாது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version