Home இலங்கை குற்றம் இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

0

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இன்று (28.10.2025) கடவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை மறைப்பதற்காக அவர் செவ்வந்திக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விசாரணைகள் 

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவருடன், இலங்கையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா (33), தக்சி நந்தகுமார் (23), தினேஷ் சியமந்த டி சில்வா (49), கென்னடி பஸ்திம்பிள்ளை (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம் ஆச்சிர்ச்சாகே (43) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version