Home இலங்கை குற்றம் ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் – பகுதியை விட்டு தப்பியோட்டம்

ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் – பகுதியை விட்டு தப்பியோட்டம்

0

நீர்கொழும்பில் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியை ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியை நடத்திய தாக்குதலால் அந்த இளைஞனின் அந்தரங்க உறுப்பு சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை நடத்திய சந்தேகத்திற்குரிய புலமைப்பரிசில் ஆசிரியை அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.


கணவரும் மேலாளரும் கைது

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அவரது கணவரும் மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவரும் மேலாளரும் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரான ஆசிரியையை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இளைஞன் கட்டான பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞனின் சகோதரி அனுப்பிய வட்ஸ்அப் செய்தியால் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட இளைஞன் சந்தேகத்திற்குரிய புலமைப்பரிசில் ஆசிரியையை கீழ் பணிபுரிந்த ஊழியர் என்று தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version