குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் அவசியமா?.. மனைவி குஷ்பு முன்பு ராதிகாவை கலாய்த்த சுந்தர் சி
முக்கிய பிரபலம் கூறிய தகவல்
இந்த நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இதில் குட் பேட் அக்லி திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ள அவர், இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என இண்டஸ்ட்ரியில் பேசி கொள்கிறார்கள். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தயாரிப்பு நிறுவனம் கூறினால் தான் நமக்கு தெரியும். அந்த புள்ளி விவரம் எல்லாம் நம்மிடம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
