Home ஏனையவை வாழ்க்கைமுறை கொத்து கொத்தான முடிவளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த வெந்தய சீரம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

கொத்து கொத்தான முடிவளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த வெந்தய சீரம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

🛑 தேவையான பொருட்கள்

  1. வெந்தயம்- 2 ஸ்பூன்
  2. கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  3. தண்ணீர் – 1 கப்

🛑 பயன்படுத்தும் முறை  

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  2. பின் இதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கொதிக்க விடவும். 

  3. அடுத்து இதனை ஆறவைத்து வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
  4. இதற்கடுத்து இதனை தினமும் தலைமுடியில் ஸ்பிரே செய்து மெதுவாக மசாஜ் செய்யவும்.
  5. இதனை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

Source: https://ibctamil.com/article/fenugreek-hair-serum-for-hair-growth-and-thickness-1781730204

NO COMMENTS

Exit mobile version