Home இலங்கை குற்றம் கொழும்பில் இரவு வேளையில் நடந்த பயங்கரம் – விரட்டி விரட்டி தாக்கப்பட்ட கும்பல்

கொழும்பில் இரவு வேளையில் நடந்த பயங்கரம் – விரட்டி விரட்டி தாக்கப்பட்ட கும்பல்

0

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உணவகம் ஒன்றின் முன் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மோதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமாக தாக்கும் காட்சிகள்

இதில் சிலரின் மீது உணவகத்தின் ஊழியர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

உணவு வாங்க உணவகத்திற்கு வந்த ஒரு குழுவிற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version