ஹேமா ராஜ்குமார்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார்.
இவர் இதற்கு செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது.
இந்த சீரியலில் இவருடைய நகைச்சுவை டைமிங், எமோஷனல் நடிப்பு ஆகியவை வெகுவாக மக்களை கவர்ந்தது. குறிப்பாக நடிகை நிரோஷாவுடன் இவர் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்… மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ
ஹேமா ராஜ்குமாரின் கணவர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமாரின் கணவர் சதீஷ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை ஹேமா பதிவு செய்வார்.
இந்த நிலையில், ஹேமா ராஜ்குமார் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..
