‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மலையக மக்களினால் ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
மலையகம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் உப தலைவர் எஸ். தயாளன், இன்று (24.12.2025) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலையை கையளித்துள்ளார்.
நிதி நன்கொடை
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் ஆர். மனோகரன், மகளிர் அமைப்பாளர் ஜி. மனோரஞ்சிதம் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ். சிவனேஷன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் பலர் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
