Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் 25 ஆயிரம் ரூபா வெள்ள நிவாரணத்தில் மோசடி!

மட்டக்களப்பில் 25 ஆயிரம் ரூபா வெள்ள நிவாரணத்தில் மோசடி!

0

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று பேருக்கு இதுவரை நிதி வைப்பு செய்யப்படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி எங்கே இந்த நிதிக்கு என்ன நடந்தது? இது தொடர்பாக பிரதேச செயலாளர் விசாரணை மேற்கொண்டு இதில் ஊழல்கள் நடந்திருந்தால் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முறையான நிவாரணம்

மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வாராந்த ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற நிலையில் அதில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நவம்பர் மாதம் 27,28 ம் திகதி நடந்தேறிய அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்காததற்கு கிராஉத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கே காரணம்.

கடந்த காலத்தில் ஊடக சந்திப்பு ஊடாக பாலமீன்மடு கிராமத்திலே ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டினால் 25 பேருக்கு வீடு சுத்திகரிப்புக்கு என நிவாரணமாக 25 ஆயிரம் ரூபா மற்றும் நிவாரணப் பொதி வழங்கப்பட்டது.

இந்த குளறுபடி தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு இது சம்பந்தமான விசேட குழு ஒன்றை அமைத்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்கும்படி ஜனாதிபதி செயலகம் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தினர்.

நிதி மோசடி

இருந்தபோதும் அரசியல் கட்சியின் சிபாரிசில் 25 பேருக்கு கடந்த 9ஆம் திகதி வழங்கப்பட்ட நிதியில் 3 பேருக்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை.

மகாலிங்கம் என்பவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை அவர் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது உங்கள் மகளுக்கு வழங்கப்பட்டதால் உங்களுக்கு வழங்க முடியாது என்றார்.

அவ்வாறு ரி. மனோ ராணி கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டபோது அவர் அடையாள அட்டையில் இலக்கம் ஒன்று பிழையாக இருப்பதால் வேறு நபர் ஒருவருக்கு அந்த பணம் சென்றுள்ளது அதை பெற்றுத் தருகிறேன் என்றார்.

தனஞ்சுதன் என்பவர் வங்கிக்கும் நிதி வைப்பிலிடவில்லை என்றதுடன் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டபோது உங்கள் வங்கி கணக்கில் 7 என்ற இலக்கம் ஒன்றாக மாற்றப்பட்டதால் வேறு நபருக்கு அந்த நிதி சென்றுள்ளது
அதை 2 நாட்களில் பெற்று தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் இன்று வரைக்கும் அந்த நிதி கிடைக்கவில்லை நாங்கள் வேண்டும் என்று எந்த அதிகாரிகளுக்கும் எதிராக ஊடக சந்திப்பு மேற்கொள்ளவில்லை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த ஊடக சந்திப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

அரசியல் கட்சி சார்ந்து இது வழங்கப்பட்டது என அறிந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்று அது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு குழு ஒன்றை நியமித்து பார்வையிடுமாறு தெரிவித்ததற்கு இணங்க பிரதேச செயலாளர் 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு அவருக்கு நன்றிகள்.

அநாகரீகமான பேச்சு

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் விடுபட்டவர்களுக்கு இந்த நிதி கிடைக்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே 25 பேரின் பெயர் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்ட 22 பேருக்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த 3 நபர்களுக்கும் வைப்பு செய்யப்பட்ட வில்லை.

எனவே இந்த 3 பேரின் நிதி எங்கே? இந்த நிதிக்கு என்ன நடந்தது? இதில் ஊழல்கள் நடந்திருக்கின்றதா? இவ்வாறு பாலமீன்மடு வில் அரசியல் கட்சியினால் பக்கசார்பாக 25 பேருக்கு வழங்கப்பட்டது என நாங்கள் ஊடகத்திற்கு கொண்டு வந்த பின்னர்தான் இந்த விசேட குழு அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் 20ஆம் திகதி பாலமீன்மடு வில் மட்டிக்கழி கலைவேந்தன், பாலமீன்மடு விளையாட்டு கழகம், லைற்கவுஸ் விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர்; கழகம் கலந்து கொண்டு பாலமீன்மடு அமைப்புகள் எல்லாம் விசமிகள் என தெரிவித்துள்ளனர்.

அந்த ஊடக சந்திப்பு முறைகேடாக 25 பேருக்கு மட்டும் நிதி வழங்கியது தொடர் சம்பவத்தை மூடி மறைப்பதற்காகவும் இந்த அரச அதிகாரிகளை காப்பாற்றுவ தற்குமான ந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது அதேவேளை பெரிய உப்போடை பிரிவிலே 178 ஏ என்ற பிரிவிலே 1238 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் எத்தனை பேருக்கு நிதி வழங்கப்பட்டது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது இது தொடர்பாக கிராம அதிகாரியை தொடர்பு கொண்டு எத்தனை பேருக்கு நிதி வழங்கப்பட்டது அதற்கான அறிக்கையை கோரிய போது அவர் அதை தர மறுத்து விட்டார்.

இந்த நிலையில் குறித்த கிராம உத்தியோகத்தரிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்மா ஒருவர் சென்று எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்த போது அவர் இந்த பிரதேசத்தில் பனடோலை நிவாரணமாக வழங்கினால் அதில் பாதி பனடோலை தருமாறு கேட்கும் மக்கள்தான் நீங்கள் என அவமதித்து அநாகரீகமான பேசியுள்ளனர்.

 கள விஜயம்

இவ்வாறு தவறான ரீதியில் மக்களை நடத்தி கொதி நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கும் இந்த கிரா உத்தியோகத்தரை விசாரணை செய்து உடனடியாக இடம் மாற்றவும்.

எனவே இவ்வாறு ஒரு சில அரச அதிகாரிகள் நடந்து கொள்வது கடந்தகால எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார்களா?

இவர்கள் இவ்வாறு செயற்பாட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் அப்போது இந்த அரசாங்கத்தை வீழத்தலாம் என்ற எண்ணப்பாட்டுடன் இவர்கள் செயற்படுகின்றார்களா?

வெள்ள காலத்தில் நீங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு பார்வையிடாமல் பாதிக்கப்பட்ட மக்களிடம் புகைப்படம் எடுத்தீர்களா காணொளி எடுத்தீர்களா போன்ற பல விடயங்களை கேட்கின்றார்கள்.

உண்மையில் கள விஜயம் மேற்கொள்ள வேண்டியது உங்கள் கடமை மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மறந்துவிட கூடாது.

இவ்வாறான நிலையில் மக்களிடம் ஏன் தரவுகளை கேட்கின்றீர்கள் நீங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிதியை வழங்கினால் இன்று மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய தேவை இல்லை.

இவர்கள் கடந்த கால ஆட்சி செய்தவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகின்றார்களா? குளறுபடி செய்தால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் அரசாங்கத்தை மாற்றினால் இவர்கள் கடந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் பெட்டி கணக்கில் வாங்கி சொகுசு வீடு அமைத்ததும் மதுபான அனுமதி பத்திரம் பெற்றது போல இந்த அரசாங்கத்தில் எதையும் செய்ய முடியாது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிதிகளை வழங்கும் போது கிராம உத்தியோகத்தரின் காரியாலயத்தில் உள்ள அறிவித்தல் பலகைகளில் நிதி வழங்கியவர்களின் பெயர் பட்டியலை ஏன் வெளியிட முடியாது.

எனவே எல்லா பிரதேசங்களிலும் நிவாரணம் வழங்கியவர்களின் பெயர் பட்டியலை ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் காரியாலயத்தில் காட்சிப்பட வெளியிட வேண்டும் அப்போது தான் என்ன மோசடி நடந்திருக்கின்றது அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் கிடைத்திருக்கின் என்பதை என மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version