Home இலங்கை சமூகம் உயர் தர பரீட்சையில் சாதித்த கிழக்கு மாகாண மாணர்வகளுக்கு மகிழ்ச்சி தகவல்

உயர் தர பரீட்சையில் சாதித்த கிழக்கு மாகாண மாணர்வகளுக்கு மகிழ்ச்சி தகவல்

0

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உயர்தரத்தில் முதலிடம் பெற்ற 360 மாணவர்களுக்கு நிதிய புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க ஜனாதிபதி செயலகம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்தால் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் பெறுபேறுகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை அங்கீகரிக்கும் கிழக்கு மாகாண திட்டத்தின் கீழ் இந்த கௌரவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, இது தொடர்பான நிகழ்வு நாளை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதிய புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்

இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்து விளங்கிய 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நிதிய புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாகாண வாரியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், சமீபத்தில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது, முதலாவது திட்டம் கிளிநொச்சியிலும், இரண்டாவது திட்டம் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மாத்தறை மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட மூன்றாவது நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதுடன், அதில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எதிர்காலத்தில் இந்த திட்டத்தை மற்ற மாகாணங்களிலும் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version