Home இலங்கை சமூகம் நல்லை ஆதீன முதல்வரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

நல்லை ஆதீன முதல்வரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

0

புதிய இணைப்பு

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பூதவுடல் செம்மணி இந்து மாயனத்தில் தகனம்
செய்யப்பட்டது.

முதலாம் இணைப்பு 

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர
தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடலுக்கு பலரும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இன்று (02) இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர்
சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (01) இறையடி சேர்ந்தார்.

பலரும் அஞ்சலி 

குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு
இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.

புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி
செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று மாலை 4 மணியளவில் நல்லை ஆதீனத்தில்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version