Home இலங்கை சமூகம் தமிழர் தலைநகரில் தீக்கிரையான சுற்றுலா விடுதி !

தமிழர் தலைநகரில் தீக்கிரையான சுற்றுலா விடுதி !

0

திருகோணமலை (Trincomalee) – அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (05)
7.45 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.

மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்திற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

தீயணைப்பு படை

இதனை அடுத்து குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தனர்.

தீப்பற்றியமை காரணமாக ஓலையினால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு அறை முற்றாக சேதம்
அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version