கிருலப்பனை பகுதியிலுள்ள உணவகமொன்றில் இன்று (12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம்
இந்திய உணவுகளை விற்கும் உணவகமே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
