Home இலங்கை சமூகம் யாழ் நெல்லியடியில் பாரிய தீ விபத்து – அதிகாலையில் அனர்த்தம்

யாழ் நெல்லியடியில் பாரிய தீ விபத்து – அதிகாலையில் அனர்த்தம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடியில் பகுதியில் உள்ள போட்டோ பிரேம் போடும் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (21.05.2025) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள், அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கு காரணம் 

இந்த தீ விபத்து காரணமாக 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.

தீ அணைப்பின் போது உடனடியாக செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் தெரிவித்துள்ளார்.  

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/Mox1kkL_U44

NO COMMENTS

Exit mobile version