கொழும்பில் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
கடுவெல, ரணால பகுதியில் உள்ள அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
கட்டுப்படுத்த நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில், தீப் பரவலின் காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
