Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: ராமேஷ்வரன் எம்.பி களவிஜயம்

நுவரெலியாவில் தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: ராமேஷ்வரன் எம்.பி களவிஜயம்

0

புதிய இணைப்பு 

பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ
விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் எனவும் ராமேஷ்வரன் உறுதியளித்துள்ளார்.

இதன்போது,  பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், சேத விபரங்களையும்
கேட்டறிந்தார்.

அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து
கொடுக்குமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட
நிர்வாகத்துக்கும்ராமேஷ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

நுவரெலியா – பூண்டுலோயா தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

 

குறித்த விபத்து சம்பவம், நேற்று(16.08.2024) இரவு 8
மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக
தீக்கிரையாகியுள்ளன.

அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20
வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த
70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயா பொலிஸார்

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க
முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

அதனையடுத்து
பூண்டுலோயா பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், 17 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான
ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப்
புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

20 வீடுகள் சேதம்

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன்
இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக
தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொத்மலை பிரதேச சபையினரும்,
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின்
ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என
தெரிவிக்கும் பூண்டுலோயா பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன்
இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version