கொழும்பு- நாராஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
