Home இலங்கை சமூகம் மஸ்கெலியா – மவுசாக்கலையில் தீப்பரவல்! 8 வீடுகள் சேதம்

மஸ்கெலியா – மவுசாக்கலையில் தீப்பரவல்! 8 வீடுகள் சேதம்

0

மஸ்கெலியா – மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த நெடுங்குடியிருப்பில் நேற்றிரவு 11.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

12 வீடுகளை கொண்ட இந்த நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

காரணம்

தோட்ட மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பவரலில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின்னொழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது பாதிப்படைந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version