யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்
குவிக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீது விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
விசமிகளின் நடவடிக்கை
மடப்பள்ளி தேவைகளுக்காக சேகரித்து குவித்து வைக்கப்பட்டிருந்த விறகு
குவியல் மீதே அடையாளம் தெரியாத விசமிகள் தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர்
தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக இவ்வாறான நடவடிக்கைகளை சில
விசமிகள் மேற்கொண்டு வருவதாக நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய
நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
