ஹட்டன் ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரபல் இன்றிரவு (03) ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரணம்
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்தினால் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த தோட்ட தொழிலாளர்களும், பகுதி மக்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
