கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து இன்று மாலை ஏற்பட்ட நிலையில் அதனை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட ஹோட்டலில் அதிகளவிலான வெளிநாட்டவர்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
தீ விபத்து
அத்துடன் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகள் தீயணைப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.