Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் தனியார் காணியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள்

தமிழர் பகுதியில் தனியார் காணியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள்

0

வவுனியா (Vavuniya) – இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து
பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள்  மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் இன்று (08) காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியாரின் குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை
செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.

ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கை

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள்
மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ
இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை
அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் 1985ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்திய இராணுவத்தின்
முகாம் ஒன்று இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version