கட்டான, கிம்புலப்பிட்டியவில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட
திடீர் வெடிப்பில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
இவ்வாறு உயிரிழந்தவர் பண்டாரவளையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் என்று அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, அவர் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில்
பணிபுரிந்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இறந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
