தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்ரினன்ட் மாலதி நினைவு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, கிளிநொச்சி (Kilinochchi) தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவாக தர்மபுரம் பிரதேசத்தையைச்சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபரணங்களும்
வழங்கப்பட்டது.
முதல் பெண் மாவீரர்
நிகழ்வில் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) “தமிழ்த்தேசிய இன அடையாளத்தை வெளிப்படுத்த நாம் ஜனநாயக தேர்தலை இன்னும் சில
நாட்கள் உள்ளன.
தேர்தலில் பல்வேறு கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் களம்
இறங்கினாலும் தமிழரசுக்கட்சி நாங்கள் சமஸ்டி கொள்கையுடனே களம்
இறங்குகின்றோம் சிங்கள மக்கள் வாழ்கின்ற உரித்து.
எமக்கும் கிடைக்க வேண்டும்
பல தேர்தலை சர்வதேச சமூகம் பார்க்கிறது .தேர்தலில் வெற்றி பெற முனைவது கூட
எமது இனத்திற்காகவே” என்றார்.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா
தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.
சிறீதரன் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா, தமிழரசுக்கட்சி
ஆதரவாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.