குறைபாடுகள் இருந்தும் மக்களின் கருத்துக்கு கடந்தகால அரசாங்கம் செவிசாய்த்து
திட்டங்களை முன்னெடுத்த நிலையில் தற்போதைய அரசாங்கம்
வடக்கின் கடற்றொழில் சமூகத்தினை கருவறுத்து ஏப்பமிடும் செயற்பாட்டை
முன்னெடுக்கின்றது என
வடக்கின் கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா
சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (16)நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு
தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
“அநுர அரசு ஆட்சிக்கு வர முன்னர் நாட்டை ஊழலற்றதாக மற்றுவோம் என கூறி ஆட்சிக்கு
வந்தனர்.
ஆனால் ஆட்சியை பிடித்தபின் தனது நிலைப்பாடை முழுமையாக மாற்றியுள்ளது.
வடக்கு மக்களுக்கு அதிர்ச்சி
இது வாக்களித்த வடக்கு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இன்று வடக்கில் பாரம்பரிய சிறு கடற்றொழிலாளர்கள் பல்வேறு வகையில் தொடர்ந்தும்
பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
அண்மையில் வடக்கின் ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்று அதில் பல
தீர்மனமானங்கள் எடுக்கப்படுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக முறையற்ற வகையில் தகவல்களை வழங்கி
மீனவர்களுக்கிடயே குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கை நடக்கின்றது.
கடலட்டைப் பண்ணைகளை நாம் முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வழங்க
வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
ஆனால் பண்ணைகளுக்காக காணிகள் அதிகாரிகளதும், அரசியல்வாதிகளதும்
விருப்புக்கேற்ப வழங்கப்படுகின்றது” என்றார்.
