கடந்த கால அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களை வஞ்சித்து செயற்படுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) – ஊர்காவற்றுறை (Kayts) பகுதியில் நேற்று (14.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளை பற்றி பேசாமல் அபிவிருத்தி மற்றும் முதலீடு என்கிற மாயைக்குள் மக்கள் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள மீன்பிடித் தடைக்காலத்தில் கடற்றொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களையும் வலியுறுத்துவதற்கு இந்திய கடற்றொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதிகளில் நேற்று (14.04.2025) நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையில் 61 நாட்களுக்கு இந்த மீன்பிடித் தடைக்காலம் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/XsFtIOFplA4
