Home இலங்கை சமூகம் படகுடன் மாயமான ஆறு கடற்றொழிலாளர்கள்! தேடும் பணி தீவிரம்

படகுடன் மாயமான ஆறு கடற்றொழிலாளர்கள்! தேடும் பணி தீவிரம்

0

தென்னிலங்கையில் இருந்து ஆழ்கடலுக்கு கடற்றொழிலுக்கு சென்றிருந்த ஆறு கடற்றொழிலாளர்களுடன் படகொன்று காணாமல் போயுள்ளது.

தென்னிலங்கையின் மாத்தறை , தெவுந்தரை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்றிருந்த கடற்றொழிலாளர்களே படகுடன் காணாமல் போயுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இவர்கள் ஆறுபேரும் ஆழ்கடல் கடற்றொழில் படகொன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தேடும் பணி

எனினும் இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் அவர்கள் சென்றுள்ள படகுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணியில் அதிகாரிகளுடன் சக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில்,இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version