Home இலங்கை சமூகம் கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடற்றொழில் வலைகள்

கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடற்றொழில் வலைகள்

0

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடற்றொழில் வலைகள் கிளிநொச்சி
மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வலைகள், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்றையதினம்(23.12.2024) அவை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கல் திணைக்கள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வலைகள் பகிர்ந்தளிப்பு

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 870 கடற்றொழிலாளர்களுக்கு தலா
06 வலைகள் மூலம் 5220 வலைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட
கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம்
ரமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version