கொழும்பு பொரளை, சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இன்று (07) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய தாக்குதல்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
