கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த விஷத் திரவத்தை மதுபானம் எனக் கருதி
அருந்தியதையடுத்து சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்தனர் எனக் கூறப்படும் கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
6 கடற்றொழிலாளர்கள்
தங்காலை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து கடந்த 4 ஆம் திகதி கடலுக்குச் சென்றிருந்த 6 கடற்றொழிலாளர்களே சுமார் 380 கடல்மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் குறித்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அதேநேரம் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவரின் நிலை
கவலைக்கிடமாகவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.