Home இலங்கை சமூகம் யாழில் பெண்கள் பாடசாலை அருகில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: ஐவர் கைது

யாழில் பெண்கள் பாடசாலை அருகில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: ஐவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நீண்டகாலமாக சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று திடீரென முற்றுகையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது விடுதி உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(24) இரவு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

சமூகத்திற்கு ஒவ்வாத முறை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு அண்மையில் இயங்கி வந்த விடுதியே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விடுதியில் சமூகத்திற்கு ஒவ்வாத முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பெண்களும் மற்றும் விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிநுட்பத்தின் அதிஉச்ச கட்டம்: பாடல் பாடும் மோனலிசா ஓவியம்- வைரலாகும் காணொளி

வெளிநாட்டு வேலை தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version